About Me

ராஜ்மோகன் சுப்ரமண்யன்.

ஊடகவியலாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்.சொந்த ஊர் திருவண்ணாமலை. புதுவைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மேலாண்மைப் பட்டம். கோவை பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் வேதாத்ரி மகரிஷி குண்டலினி ஆராய்ச்சி மையத்தின் யோகமும் மனித மாண்பும் படிப்பில் முதுநிலைப் பட்டம், சென்னைப் பல்கலைக் கழகத்தில் உளவியலில் முதுநிலைப் பட்டம். மனோவசியகலை மற்றும் ஆளுமை திறனூக்க பயிற்சியில் பட்டயமும் பெற்றுள்ளார்.ஊடகவியல்துறையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம்.

பல்வேறு வார இதழ்களில் பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகள்.தொலைகாட்சி மற்றும் விளம்பரபடம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.கன்னடத் தொலைக்காட்சியுலகில் லட்சுமியுடன் கதை அல்ல ஜீவனா, கோல்டன் ஸ்டார் கணேஷூடன் ததாஸ்து மற்றும் சிவராஜ் குமாருடன் நானிருவதே நினகாகி ஆகிய நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.

இது மட்டுமின்றி முன்னனி தொழில் நிறுவனங்களுக்கு கார்பரேட் படங்களுக்ம், 200 க்கும் மேற்பட்ட விளம்பரங்களும் இயக்கியுள்ளார். இவரின் பொழுது போக்கு யோகா பயிற்சி அளிப்பது மற்றும் பயணங்கள் மேற்கொள்வது. தற்போது  சென்னை மற்றும் மும்பையில் வசித்து வருகிறார்.

கடந்த 2015 ல் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற  தமிழநாடு சர்வதேச முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஊடகபிரிவில் பணியாற்றியிருக்கிறார். இந்நிகழ்வுகென பிரத்யோகமான விளம்பரம் மற்றும் விவரண்ப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசி அங்கீகரிக்கப்பட்ட விளம்பர பட இயக்குனராக தமிழக அரசுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கியுள்ளார்.

மலேசியாவின் பினாங்கு மாகாணத்தில் உள்ள பாலிடெக்னிக் செபராங் பெராய் பல்கலைக்கழத்தின் ஊடக பிரிவின் விசிட்டிங் பயிற்றுநராகவும் அங்கீகரிக்கப்ப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் என்லைட்டென்மெண்ட் டெலிவிஷனுடன் இணைந்து " த அவெக்கனிங் ஆப் ஹியுமன் மேன் கைண்ட்" என்ற டாகுமெண்டரியை இயக்கியுள்ளார்.

உலக புகழ்பெற்ற காட்பாதர் திரைக்கதை நூலை தமிழ் மொழிபெயர்ப்புக்காக தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கிறார்.

வதற்போது தனது ஸ்கொயர் ஹில்ஸ் நிறுவனத்தின் மூலம்  தமிழில் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...