Friday, November 26, 2010

நிற்கையில் நிமிர்ந்து நில் !

எண்ணத்தின் ஆற்றல் என்ன ?

நெல்லை அருகே பத்தமடையில் பிறந்து இமயம் வரை ஆன்மிக கோலோச்சியவர் சுவாமி சிவானந்தர்.சுவாமி என்பது அடையாளம் அல்ல. அது ஒரு அடைமொழி அன்பின் மிகுதியால், ஆன்மிக வலிமைப் பெற்றவர்களுக்கு தரும் அடைமொழி.

சிவானந்தர் எண்ணம் என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்."எண்ணம்தான் உலகின் வலிமையான ஆயுதம். எண்ணம் வினாடிக்கு சுமார் 1,36,000 மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. உதாரணத்திற்கு இந்த பூமி பந்தை எடுத்துக்கொள்வோம். சுமார் 25000 மைல் விட்டம் உடையது. ஒரு எண்ணத்தை விதைக்கிறீர்கள் எனில்,நீங்கள் நினைக்கும் எண்ணம் ஒரு வினாடியில் இந்த பூமியை சுமார் ஆறு முறை சுற்றி வரும்".

எண்ணத்தைவிட வேகமாக பாயும் துப்பாக்கித் தோட்டாக்கள் இருக்கிறதா ?

எண்ணத்தின் வேகத்தை விஞ்சும் ஏவுகணை இருக்கிறதா ?

எண்ணத்தை விட உறுதியாக தாக்கும் ஆர்டிலறிகள் இருக்கிறதா ?

இன்றைய உலக நிகழ்வுகளுக்கெல்லாம் அடிப்படை எண்ணம்.

அது தனிமனித எண்ணமாக இருக்கலாம்.

ஒரு குழுவின் எண்ணமாக இருக்கலாம்.

எண்ணம் தான் உலகை ஆட்டிப் படைக்கின்றது.

இன்று தமிழீழ மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது.

தமிழர்கள் மீதும் தமிழீழத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடிக் கணக்கான மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது.

நவம்பர் 26

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈழமே கொண்டாடி மகிழ்ந்த திருநாள்.

ஆனால் இன்று?

ஈழத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நெஞ்சில என்ன இருக்கிறது.

எல்லோரின் மனதிலும் ஒரு வேதனை.

ஒரு வலி !

ஒரு விரக்தி !

ஒரு இனம் புரியாத அழுத்தம் !

கண்ணுக்கு முன்னே ஒரு இருள்.

மொழி தெரியாத தேசத்தில் வழித் தெரியாமல் மாட்டி கொண்ட பயணிபோல் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்றது அனைவரின் எண்ணமும.

யார் எத்தகைய ஞானம் பெற்று இருந்தாலும், வலிமையான மனம் படைத்தவராயினும் இந்த ஒரு நிகழ்வில் கலங்கிதான் போய் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்படி நினைத்து பாருங்கள்.எண்ணம் சற்று தடுமாறி தான் போயிருக்கிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்.

யார் சொல்வதை நம்புவது..?

நம்பிக்கைக்கு உரியவர்களாக தோன்றியவர்கள் இன்று துரோகிகளாக மாறிவிட்டனர்.

நிமிடத்திற்கு ஒரு மாறுபட்ட செய்தி வருகிறது.

மனம் எதை நம்புவது.

மனம் நம்புவதை தான் எண்ணம் செயல்வடிவம் கொடுக்கும்.

மனம் விரக்தியில் குழப்பத்தில் பல்வேறு சிந்தனைகளுடன் இருக்கும் போது எதற்கு செயல்வடிவம் தருவது ?

மேதகு பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? இதுதான் இன்று பெரிய கேள்வி.

இன்றைய நிலையில் பிரபாகரன் திடீரென்று தோன்றினால் அவரால் முன் போல் உடனடியாக ஒரு போராளிக் குழுவை கட்டமைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

இது மற்றொரு கேளவி ?

பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பதை பிறகு பார்க்கலாம்.

அவரின் இலக்கு, இலட்சியம்,சிந்தனை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அந்த சிந்தனை வான் காந்தத்தில் எண்ணற்ற மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் வரும் போது வரட்டும். அதுவரை நம் இலக்கான தமிழீழம் என்பதில் இருந்து மனம் சற்றும் குழப்பமாக சிந்திக்க கூடாது.

எண்ணம் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் அந்த ஆயுதத்தை பயன்படுத்தி தமிழீழம் காண்போம்.

எட்டு கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இவ்வுலகில், 150-ற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் முழக்கம் நடைபெறும இன்றைய நிலையில் இந்த மக்களின் எண்ணத்தை ஒருங்கிணத்தாலே போதும் கத்தியின்றி இரத்தமின்றி தமிழீழம் மலரும்.

இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது.

மகாத்மா காந்தி அகிம்சையை நம்பினார்.

சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதத்தை நம்பினார்.

ஆனால் மகாகவி சுப்ரமண்ய பாரதி எண்ணத்தை நம்பினார்.

1947 ஆகஸ்ட் 15 - ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

அதற்கு முன்பு சரியாக பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாரதி பாடினார்.

”ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”

அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இந்த பாடல் ஒரு கிளர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கியது.

இந்த பாடலை உச்சரிக்கும்போதெல்லாம் மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதாகவே கற்பனையில் சஞ்சரித்தனர்.உண்மையிலும் நம்பினர்.இப்பாடல் எண்ணற்ற தமிழர்கள் இந்திய விடுதலை வேள்வியில் பங்கேற்க உறுதுணை புரிந்தது.

காரணம் எண்ணம்.

எண்ணத்திற்கு எதுவும் தெரியாது.

அது ஒரு கிளிப்பிள்ளை. அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதை செயல்படுத்தும்.

எண்ணத்தினால் முடியாதது எதுவுமில்லை எண்ணத்திற்கு அப்பாலும் எதுவுமில்லை.

தமிழீழத்திற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றுதான்.

நம் எண்ணத்தை நம்ப வைப்போம். எண்ணத்திடம் வலிமையாக சொல்வோம் நாம் தமிழீழம் பெற்றுவிட்டோம் என்ற ஆனந்தமானச் செய்தியை.

சரி எண்ணத்தை எப்படி நம்பவைப்பது.

மிக சுலபம்.

உங்கள் எண்ணம் நீங்க சொல்வதை நம்பாதா என்ன ?

ஒரு சிறு உளவியல் பயிற்சி அல்லது தவம் அல்லது தவத்தின் மூலம் இது சாத்தியம்.

தவம் என்றே சொல்லுவோம்.

ஆம்..! தமிழீழ தவம்.

எப்படி செய்யலாம் தமிழீழ தவம்.

சத்தமில்லாத ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.அறையில் மெல்லிய வெளிச்சம் இருக்கட்டும்.நல்ல காற்றோட்டம் பரவட்டும். குளிர்சாதன இயந்திர ஓசை, ஏன் மின் விசிறியின் ஓசையைக் கூட நிறுத்திவிடுங்கள்.

அறைக்குள் ஒரு நிசப்தம் பரவுவதை உணருங்கள்.

இப்போது ஒரு அமைதி பரவுகிறது.

உங்கள் உடல் முழுவதும் கவனியுங்கள்.

அமைதி.!..அமைதி.!..எங்கும் ஒரு அமைதி பரவுகிறதை நாம் உணர்கிறோம்.

இப்போது மெதுவாக கண்களை மூடிக்கொள்கிறோம்.


நம்மை சுற்றி ஒரு இருள் பரவுகிறது.

உடலையையும் சுற்று சுழலையும் கவனிக்கிறோம்.

அமைதி ! எங்கும் அமைதி !

கொஞ்சம் நேரம் நம்மைச் சுற்றியுள்ள அமைதியையே கவனிக்கிறோம்.

ஆஹா என்ன அமைதி ! என்ன ஒரு ஆனந்தம். அந்த அமைதியின் ஆனந்தத்தை கொஞ்ச நேரம் அனுபவிப்போம்.

அப்படியே உங்கள் கண்களை மூடிக்கொண்டே இருப்போம்.

நாம் இப்போது தமிழீழ தவம் செய்கிறோம்.

தேவையற்ற எந்த சிந்தனை வந்தாலும் அதனை ஒரு புன்னகை மூலம் வழியனுப்புவோம்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம் !
வெல்க தமிழீழம் !

இதோ “ நான் தமிழீழ தவம் செய்கிறேன்...தவம் தவிர வேறு எதுவும் இப்போது எனக்கு தேவையில்லை...நீங்கள் செல்லுங்கள்....வாழ்க வளமுடன் “

சிந்தனையை தமிழீழ தவத்தின் மீதே செலுத்துகிறோம்.

கவனத்தை நம் மூச்சின் மீது செலுத்துகிறோம்.

நம் மூச்சையே கவனிக்கிறோம்.

வாழ்க வளமுடன் !
வெல்க தமிழீழம் !

மெல்ல மெல்ல.....


நமது எண்ணத்தால் கற்பனையில் ஒரு பாவனையில் நாம் விரும்பும் தமிழீழத்தை வடிவமைக்கிறோம்.

நம் தமிழீழத்தில் என்ன வேண்டும்..நாம் விரும்பும் தமிழீழம் எப்படி இருக்கவேண்டும் ?

இதோ....தமிழீத்தில் நாம் இருக்கிறோம் !

காதலும் வீரமும் விளையும்....

தமிழர்தம் பெருமை பேசும்...

தேமதுர தமிழோசை ஒலிக்கும் தமிழீழம்.

உலகின் முழுமையான தமிழ் பேசும் ஒரே நாடு.

தேசியத் தலைவரின் பிறந்த நாள் இன்று.

தமிழீழம் முழுவதும் கோலாகலப்படுகிறது.

சாலையெங்கும் மாவிலைத் தோரணங்கள்.

மா பலா வாழை என முக்கனிகளில் சாரங்கள்.

அரிசி மாவுக் கோலங்கள் வீதியெங்கும் அலங்கரிக்கின்றன.

கொஞ்சும் தமிழ் இளம் பெண்கள் பாரம்பரிய தேசிய உடைகளில், தாவணிகளில், சேலைகளில், வளையோசை குலுங்க குலுங்க...வலையோசையின் இன்னிசையை மிஞ்சும் குதுகலமுடன், சலசலக்கும் குயிலோசை சிரிப்பில் வீதியெங்கும் வளம் வருகின்றனர்.

வலிமைமிகு கட்டிளங் காளைகள் நிமிர்ந்த நன்நடையுடன், தோள்களை உயர்த்தி, தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கம்பீர பார்வையுடன் வீர நடைப் போட்டு வருகின்றனர்.
சங்கே முழங்கு...! என வீரமிகு தமிழிசை பாடல்கள் வீதியெங்கும் ஒலிக்கின்றன.

எம் தமிழர் பாரம்பர்யம் பருக, உலக நாகரிகத்தின் தொன்மை உணர இதோ பன்னாட்டு மக்களும் மகிழ்வுடன் உலா வருகின்றனர்.

விருந்தொம்பல் பண்பின் அழகாம் எம் மக்கள் இதோ பன்னாட்டு குடிகளை போட்டி போட்டு கொண்டு தத்தம் வீடுகளுக்கு வரவேற்று பண்பாடு போற்றுகின்றனர்.

வானொலிகளும், தொலைகாட்சிகளும்,ஊடகங்களும் தமிழிசைய நற்றமிழ் உரைகளை காற்றில் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

உலகின் ஒரே முழுமையான தமிழ் தேசமான தமிழீழம் உலக வரைபடத்தில் ஒரு மணி மகுடமாக திகழ்கிறது.

எம் மக்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

எம் மக்கள் தொழில்நுட்பத்தில் முடிசூடுகின்றனர்.

எம் மக்கள் அன்பில் விருந்தோம்பலில் மகிழ்கின்றனர்.

எம் மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, துன்பங்கள் இன்றி இதோ மகிழ்ச்சியுடன் வாழுகின்றனர்.

காணும் இடமெல்லாம் பசுமைச் சோலைகள்.

உலகின் ஒரு முன்னனி தேசத்தில் இருக்கிறோம்.

சூற்றுச் சுழல்களுக்கு கேடு செய்யாத கட்டிடங்கள்.

காவல்துறை கட்டாயத்துறை அல்ல மக்களின் வழிகாட்டி.

தமிழீக வங்கிகள் தமிழினத்தின் செல்வ செழிப்பை உணர்த்துகின்றன.

உலகவரைபடத்தில் தமிழிர்களின் முழுமையான நாடு தமிழீழம் இதோ உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்கிறது.

தமிழீழம் வாழ்க !
தமிழீழம் வெல்க !

தமிழீழம் வாழ்க !
தமிழீழம் வெல்க !

தமிழீழம் வாழ்க !
தமிழீழம் வெலக் !


ஆஹா! இந்த ஆனந்தமயமான காட்சிகளை சில நிமிடங்கள் அனுபவிப்போம்.

கண்முன்னே எத்தகைய தடை வந்தாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவோம்.

வாழ்க தமிழீழம்
வெல்க தமிழீழம்

உணர்ச்சி வசப்படாமல் ஒரு மென்மையான புன்னகையுடன் வழியனுப்புவோம்

வாழ்க தமிழீழம்
வெலக தமிழீழம்


நம் சிந்தனை முழுவதும் மிக ஆழமாக மிக ஆழமாக தமிழீழத்தின் மீது இருக்கிறது.


எத்தகைய எதிரி வந்தாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவோம்.


“ பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே” என்றான் பாரதி.

பகைவனே நீ எனக்கு துன்பம் இழைத்தாய் நான் உன்னை வாழ்த்துகிறேன் சென்று வா !

எத்தகைய துன்பமான காட்சிகள் வந்தாலும் அதனை வழி அனுப்புவோம்.

“துன்பமே போ..இனி உனக்கு இங்கு இடமில்லை...எங்கள் நெஞ்சுறுதி கண்டாய் அல்லவா” இனி உனக்கிடமில்லை போ....”

துன்பமே போ..

இன்பமே வா...

அமைதி பரவட்டும் ....! எங்கும் அமைதி பரவட்டும் ! தமிழீழத்தில் நாம் இருக்கிறோம் !

ஒரு ஆனந்தமயமான சூழலில் இருக்கிறோம்.

மனதில் எத்தகைய் சஞ்சலமும் இல்லை ! அமைதி ! அமைதி ! அமைதி !


நாம் தமிழீழத்தில் இருக்கிறோம்.தமிழீழம் மலர்ந்திருக்கிறது.

மனக்கோயில் கண்ட மாணிக்கவாசக நாயனார் போல் நமது இதயத்தில் தமிழீழம் மலர்ந்திருக்கிறது.

நமது எண்ணத்தில் மலர்ந்த தமிழீழத்தின் வெற்றியை உலகெங்கும் பரப்புவோம்.

இந்த வலிமயான எண்ணத்தை பிரபஞ்சமெங்கும் விரிவாக பரவ விடுவோம்.

மெதுவாக எண்ணத்தால் விரிவடைந்து...விரிவடைந்து மேலே மேலே செல்கிறோம்.

விண்ணில் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களின் ஊடே தமிழீத்தை பாருங்கள்.

பிரபஞ்சத்தில் பூமி ஒரு அங்கம்.

பூமியில் வெற்றி முரசு கொட்டும் தமிழீழம் ஒரு அங்கம்.

மேலே விண் கூட்டம்.

கீழே விண்மீனாய் மின்னும் தமிழீழம்.

தமிழீழத்தை வாழ்த்துவோம்.

வாழ்க தமிழீழம் !
வெல்க தமிழீழம் !

நமது எண்ணத்தை மெதுவாக உலக நாடுகளின் மீது செலுத்துவோம்.
உலகின் பலவேறு மக்கள் மீது செலுத்துவோம்.

இப்பூமியில் பிறந்த அனைவரும் நம்மை போன்ற சக மனிதர்களே.
எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

ஒவ்வொரு தேசத்தின் மக்களும் தமிழீழத்தை வாழ்த்துகிறார்கள்.

நிறம்,மொழி,இன வேறுபாடுகளின்றி தமிழீழத்தை வாழ்த்துகிறார்கள்.

வாழ்க தமிழீழம் !
வெல்க தமிழீழம் !

உலகமே தமிழீழத்தை வாழ்த்துகிறது.

எண்ணத்தால் பயணித்துகொண்டே செல்கிறோம்.

எல்லோரும் ஒரு மனதுடன் வாழ்த்துகிறார்கள்

எதிரிகள் கூட மனம் திருந்தி நம்மை வாழ்த்துகிறார்கள.

நம் இலக்கு தமிழீழம். நமது தேசத்தில் இருக்கிறோம். முரண்பட்ட கருத்து உடையோர் கூட மனம் திருந்தி வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க தமிழீழம் !
வெல்க தமிழீழம் !

உலகம் நம்மை வாழ்த்துகிறது.

உலக மக்களின் வாழ்த்துக்கள் செயல்படுகிறது. எல்லோருடைய எண்ணமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

எல்லாம் வல்ல இறைநிலையான இயற்கையிடம் இதை வலிமையாக பதிவு செய்வோம்.


“இறைநிலையாகிய வான்காந்த சக்தி எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம், ஜீவகாந்தமாக மாற்றம் பெறும் ஒவ்வொரு ஜீவனின் கருமையத்திலும் தமிழீழம் உறுதி பெறட்டும்”

“இறைநிலையாகிய வான்காந்த சக்தி எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம், ஜீவகாந்தமாக மாற்றம் பெறும் ஒவ்வொரு ஜீவனின் கருமையத்திலும் தமிழீழம் உறுதி பெறட்டும்”

“இறைநிலையாகிய வான்காந்த சக்தி எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம், ஜீவகாந்தமாக மாற்றம் பெறும் ஒவ்வொரு ஜீவனின் கருமையத்திலும் தமிழீழம் உறுதி பெறட்டும்”

அப்படியே கண்கள் மூடிய நிலையில் ஆழமாக வாழ்த்துவோம்.

தமிழீழத்தை அக காட்சியாக காண்கிறோம்.

அப்படியே மெல்ல மெல்ல எண்ணத்தில் உறுதியேற்றுவோம்.

தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !


வலிமையான அந்த தமிழீழத்தை பிரபஞ்சத்தில் வான் காந்தத்தில் பதிவுசெய்தபடி இயல்பு நிலைக்கு திரும்புகிறோம்.

மெதுவாக இரண்டு கைகளை மேலே உயர்த்தி இருகரங்களின் உள்ளங்கைளையும் மென்மையாக மூன்று முறை உரசி,இரண்டு கண்களையும் பொத்தி, அந்த உஷ்ணத்தை சிறிது நேரம் உணருகிறோம்.

தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !
தமிழீழம் வலிமை பெறட்டும் ! வாழ்க தமிழீழம் !


பின்னர் கண்களை மெதுவாக திறந்து வெளியுலகை பாருங்கள்.

இதுதான் தமிழீழ தவம். இப்போது எப்படி இருக்கிறது உங்கள் மனம் ?

உங்கள் மனதிலும் எண்ணத்திலும் ஒரு புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

இது ஒரு உளவியல் பயிற்சி அல்லது போர் எனலாம். எண்ணத்தை கொண்டு ஒரு போர்.

போர் என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தவேண்டாம்.

தவம் எனலாம்.

தமிழீழ தவம்...!

இந்த தமிழீழ தவம் ஏனைய தவம் போன்றது தான். தினமும் ஒரு 30 நிமிடம் செய்வோம்.

தமிழீழத்திற்காக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும். எண்ணத்தால் நாம அதற்கு வலிமை சேர்ப்போம்.இது ஒரு பிரார்த்தனைப் போன்றது. பிரார்த்தனையில் எண்ணம்தான் செய்ல்படும்.இங்கு தெளிவான வழிமுறையின்படி செய்யும் போது எண்ணம் விரைவில் நிறைவேறும்.

இந்த பயிற்சியின் போது எத்தகைய கோபமான எண்ணங்கள் வந்தாலும்,அதனை மென்மையான அணுகுமுறையின் மூலம் தவிர்க்கவேண்டும்.

எண்ணம் மென்மையாகும்போது தான் வலிமையடையும்.

எண்ணம் மோதுதல்,பிரதிபலித்தல்,சிதறுதல், ஊடுருவல் என்று நான்கு தன்மைகள் உடையது.

இதில் ஊடுருவல் நிகழும்போது எண்ணங்கள் நிறைவேறும்.

நினைத்தது நடக்கும்! கேட்பது கிடைக்கும்!

அதற்கு எப்போதும் மென்மையான சாந்தமான ஒரு கத்தி போன்ற கூர்மையான மனநிலை அவசியம்.

இதே போல் எண்ணத்தின் அலைகள் நான்கு வகைப்படுகிறது.

ஆல்பா
பீட்டா
தீட்டா
டெல்டா

பொதுவாக உணர்ச்சிவசமான நிலையில் மனம் பீட்டா அலைவரிசையில் இருக்கும்.
அப்போது எண்ணம் எங்கும் பிரதிபலிக்காது.

அதனால் பேராசை,கடுஞ்சினம்,கவலை,வருத்தம் உட்பட உணர்ச்சி மயமான எண்ணத்தை எப்போதும் தவிர்ப்போம்.

நினைத்தது நடக்க எப்போது ஆல்பா, தீட்டா அல்லது டெல்டா அலைவரிசையில் இருப்போம்.
அதற்கு தான் வாழ்த்து.இந்த தவம் துணை நிற்கும்.

நீங்கள் இத்தகைய உளவியல் பயிற்சி செய்யும்போது விரும்பத் தகாதவர், எதிரியின் உருவமே முன்னே வந்தாலும் ஒரு புன்னகை ஒரு வாழ்த்தில் அவரை வழி அனுப்புங்கள். எண்ணம் எப்பொழுதும் கூர்மையாக இருக்கும்.

ஒரு கதிர் வீச்சைப் போல் எண்ணம் எப்போதும் கூர்மையாக இருக்கட்டும்.

எண்ணம் அதி சக்திவாய்ந்த ஆயுதம்.

எண்ணத்திற்கு நிகர் எண்ணமே.

உலகம் முழுவதும் எட்டு கோடி தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ஒரு பத்து சதவீதம் பேர் இந்த பயிற்சியை தினமும் ஒருமுறை செய்தாலே போதும் வான் காந்தம்,ஏன் இந்த பிரபஞ்சம் முழுவதும் தமிழீழ அலையே நிரம்பி வழியும்.

இது வலிமைபெற வலிமைபெற தானே தமிழீழக் மலரும்.

இனி எந்த ஒரு சுழலிலும் வேதனையான,விரக்தியான வெளிப்பாடுகள் வேண்டாம்.

நீங்கள் உங்கள் வேதனைகளை இறக்கிவைக்க செய்யும் பதிவுகள் ஒரு பத்து நபர்கள் படித்து, பத்து நூறாகி பல்கிப் பெருகி மீண்டும் அந்த வலி மிகுந்த அனுபவத்தையே வான்காந்தத்தில் அதிகரிக்கச் செய்யும்.வான் காந்தத்தில் துன்பமே பதியும்.

இனி எந்த ஒரு பதிவும் வெற்றிகரமான நம்பிக்கையூட்ட கூடிய பதிவாக இருக்கவேண்டும். நீங்கள் தரும் நம்பிக்கையை படிக்கும்போது பத்து நூறாகி பல்கிப் பெருகி தமிழீழம் மலரச் செய்யும்.

எண்ணம் ஒரு வலிமையான ஆயுதம்.எண்ணமே வாழ்க்கை.

நமது எண்ணத்தில் எப்போதும் வெற்றி முழக்கத்தையே முழங்கச் செய்வோம்.

பாவேந்தர் பாரதிதாசன் உணர்ச்சிப் பாடலில் ஒரு வரி

“நிற்கையில் நிமிர்ந்து நில் ! “

ஆம் நிற்போம் நிமிர்ந்து.எந்த ஒரு சூழலிலும் வளையாமல்.

மலர்ந்தது தமிழீழம் !

வாழ்க தமிழீழம்.

வளர்க தமிழீழம்.

1 comment:

  1. மலர்ந்தது தமிழீழம் !

    வாழ்க தமிழீழம்.

    வளர்க தமிழீழம்.

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...