Monday, December 30, 2019

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 2




இங்கு ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆம் ! இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை !

பிரபஞ்சம் வேறு  நாம் வேறு இல்லை.

பிரபஞ்சமும் நாம்தான்.  அதில் இருக்கும் ஒவ்வொரு வடிவமும் நாம் தான்.

என்னடா ! ஒரே தத்துவமாக இந்த வாரம் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறீர்களா ?
அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இந்த தத்துவத்தில் தெளிந்து நின்றால் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால் அடைய முடியும். 

நிச்சயமாக முடியும் !

கொஞ்சம் எளிமையாகவே புரிந்துகொள்ள முயற்சிப்போம். சின்னதாக ஒரு கற்பனை . 

ஒரு மலையின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். கண்களை இறுக்க மூடிக்கொண்டு நிற்கிறீர்கள். இப்பொழுது உங்கள் புலன்கள் தான் உணர்வுகளை கடத்தும் ஒரே வழி. அதாவது கண்களை மூடிகொண்டதால் உங்களை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை பார்க்க முடியாது. ஆனால்  உணர முடியும். சுற்றி இருப்பதை பாவனையாக பார்க்க முடியும். இப்பொழுது கூர்ந்து உங்களை சுற்றி கவனியுங்கள்.

உங்களுக்கு மேலே நீலவானம். உங்கள் பாதம் மலையின் உச்சியில் நிற்கிறது. சில்லென்று காற்று உங்கள் உடலை தழுவிகொண்டு செல்கிறது. அந்த காற்று உங்கள் உடலை தழுவும் போது ஒரு குளிர்ச்சி உடல் எங்கும் பரவுகிறது ?

சரி அடுத்த விஷயத்தை கவனிப்போம்.  

இப்பொழுது,உங்களுக்குள் நீங்கள் இழுத்துவிடும் சுவாச காற்றும். வெளியே உங்கள் உடலை வருடும் இனிமையான அந்த தென்றல் காற்றும் ஒன்றுதானே ? 

இது வேறு ? அது வேறு என்று சொல்ல முடியுமா ? 

வெளியில் வீசும் காற்றும் முற்றிலும் நின்றுவிட்டால் சுவாச காற்றும் நின்றுவிடும் அல்லவா ? உள்ளும் புறமும் இருக்கும் காற்று எப்படி ஒன்றோ ? அதே போன்று பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றேதான். இது தான் பிரபஞ்சம் சொல்லும் சேதி.


சரி இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம்.

 உங்கள் மூச்சையே திரும்பவும் கவனியுங்கள். ஒரு ஆனந்தமான அதிர்வலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உணரமுடிகிறது. உங்கள் மூச்சை நீங்கள் நன்றாக கவனிக்க முடிகிறது. நன்றாக.....மிக நன்றாக......நீங்கள் மூச்சை உள்ளிழுத்து விடுகிறீர்கள். அது உடல் முழவதும் உள்ள கோடிக்கணக்கான அணுக்களில் ஊடுருவி அதற்குள் ஒரு சுழற்ச்சியை உண்டாக்குகிறது. வெளியே பூமி சுழன்றுகொண்டிருக்கிறது. 

சுழன்றுகொண்டிருக்கும் பூமியில் நிலையாக நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நிலையாக நின்றுகொண்டிருக்கும்பொழுதும் உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஒரு சுழற்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது. 

இந்த அனுபவத்தை என்றாவது  யோசித்து பார்த்திருக்கிறோமா ? 

உங்களுக்குள் உள்ளும் உங்களுக்கு புறமும் நிகழும் சுழற்சி ஒன்றெனில் நீங்களும் அதுவும் ஒன்றுதானே. நீங்கள் அதுவாகிறீர்கள். அது நீங்களாக இயங்கிகொண்டிருக்கிறது.

பிரபஞ்சம் சொல்லும்  உண்மை என்ன ? நீ வேறு நான் வேறு அல்ல.

அடுத்து இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம்.

இப்பொழுது உங்கள் உடலை நினைத்துகொள்ளுங்கள். உங்கள் உடல் இந்த வெட்டவெளியில் நிற்கிறது. திடீரென்று உங்கள் உடல் கரைந்துவிட்டால் அங்கு என்ன இருக்கும் ? அதே வெட்டவெளிதான். நீங்கள் இருப்பீர்கள். வெட்டவெளி இருக்கும். ஆனால் உடல் இருக்காது. அதாவது உடலற்ற நீங்கள் வெட்டவெளியோடு வெட்டவெளியாக இருப்பீர்கள். இப்பொழுது சொல்லுங்கள். 

நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறா ? 

பிரபஞ்சம் பேசும் மொழி நீங்கள் பேசும் மொழி இரண்டும் ஒன்றுதான்.  அப்படியெனில் பிரபஞ்சத்துக்கு ஆட்பட்ட எல்லாமும் உங்களுக்கு ஆட்பட்டது. பிறகு ஏன் பல விஷயங்கள் நமக்கு கிடைக்காதது போல் நாம் நினைத்து கவலையில் உழல்கிறோம்.

பதில் மிக எளிது. பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக நாம் இயங்கிகொண்டிருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இயங்கிகொண்டிருக்கிறோம். 

நாம் புலன் வழியில் சிந்திக்கிறோம். புலன் வழியில் செயல்கிறோம். நமக்கு தெரிந்த வாழ்க்கையில் இன்பம் என்றால் அது புலனின்பம் மட்டுமே. 

ஆனால் நாம் நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வோடு அணுகும்பொழுது ஒரு விழிப்பு நிலையில் மட்டுமே நிகழ் அனுமதிக்கும்பொழுது நம்மை சுற்றி எல்லாம் நம் கட்டுபாட்டில் இயங்க தொடங்கும். இது தான் இயற்கையின் விதி.

அதாவது உங்களை சுற்றும் நிகழ்வை நீங்கள் விழிப்புணர்வுடன் கவனிக்கிறீர்கள் எனில் அது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று அர்த்தம்  . முதலில் சிறிய விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறகு எல்லா விஷயங்களையும் அதன் நியதிக்குட்பட்டு கட்டுபடுத்தும் ஆற்றல் உங்களுக்குள் தானாக வரும். பின்னர் பிரபஞ்சத்தோடு இணைந்து செயல்படும் திறன் மிகும். பின்னர் பிரபஞ்சமாகவே மாறி நிற்பீர்கள். 
மொழி தெரியாத ஒரு நாட்டிற்கு வேலைக்கு செல்கிறோம் . அங்கு இருப்பவனும் மனிதனே.நாமும் மனிதர்களே. இருவருக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால்  இருவரும் ஒரே நிலையில் செயல்படுவோம் அல்லவா ? அதே போல் நாம் வேறு பிரபஞ்சம் வேறு என்ற நிலையை உணர பொதுவாக ஒரு மொழி அவசியம். அது பிரபஞ்ச மொழி. அது என்னவாக இருக்கும் ?

பாத்திரம் அடைந்து பிச்சையெடு என்றார்கள் பெரியவர்கள்.
நாம் பிரபஞ்ச ஷக்தியை முழுவதும் உணர நமது பாத்திரத்தை தகுதியாக்குவோம்…

( பிரபஞ்சம் பேசும் ....)







நம்ம ஊரு Life Coach
கணியன் பூங்குன்றனார்.
பிரதமர் மோடி முதல் குக்கிராமத்தில் பாடமெடுக்கும் அரசு வாத்தியர் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு உதாரணம் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என ஆரம்பிக்கும் புறநானுற்றுபாடல். உலகம் ஒன்றுதான். நமக்கு ஏற்படும் விளைவுகளுக்கு நாமே காரணம் என்பது இதன் பொருள். இன்று Law of Attraction, Cosmic Theory, Cause and Effects, Success Formula என்று எண்ணற்ற வகுப்புகள் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மந்திர சொற்களின் மூலம் கணியன் பூங்குன்றனார் சொல்ல வந்த வாழ்வியல் நியதியை சொல்லிவிட்டார்.  இதை ஒவ்வொருவரும் உணர்ந்து இயங்கினாலே உலகில் போர்பகை, அச்சம்.உயர்வு தாழ்வு மனப்பான்மை வராது.எல்லோரும் சமம் என்பதுதான் அவர் சொல்லும் தாரகமந்திரம். " பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ( புறநானுறு : 192 ). என்ன அற்புதமான வார்த்தைகள் பாருங்கள். வழக்கமாக பெரியோரை போற்றுங்கள் சிறியோரை போற்றாதீர்கள் என்று தான் அறநூல் சொல்கின்றன. இவர் பெரியோரை வியத்தலும் இலமே என்கிறார். நீ ஒரீடத்தில் பெரியவர் இவர் என்று நினைத்து அவரை புகழ்வதும் தவறானது . ஏன் எனில் அங்கு அவரை விட சிறியவர் ஒருவர் இருக்கலாம். இந்த புகழ்ச்சி அவருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மை தரலாம்.அதனால்  பெரியோரை வியத்தலும் வேண்டாம் எளியோரை இகழ்தலும் வேண்டாம் என்று உள்ளத்தூய்மைக்கு வழிசொல்லிறார் பல நூற்றாண்டுகளை கடந்தும் வாழும் இந்த Life Coach.



இந்த வார வழிகாட்டுதல் 
சுவாமி சிவானந்தர் எழுதிய " எண்ணம்"

திருநெல்வேலிக்கு அருகே பத்தமடையில் பிறந்து உலகின் புகழ்பெற்ற மருத்துவராக உயர்ந்தவர் சுவாமி சிவானந்தர். மலேயா நாட்டில் மருத்துவ தொழிலில் கொடிகொட்டி பறந்துகொண்டிருந்த சிவானந்தருக்கு ஏற்பட்ட ஆன்மீக உந்துதல் அவரை இமயத்திற்கு பயணப்பட தொடங்கியது. இமயம் எனது தந்தை கங்கை எனது தாய் என்று ஆன்மீக பிரகடம் செய்து டிவைன் லைப் சொசைட்டி எனும் அமைப்பின் மூலம் அறவாழ்வில் சேவையாற்ற தொடங்கினார் சிவானந்தர். நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதியுள்ள சுவாமி சிவானந்தரின் மாஸ்டர் பீஸ் என்றால் " எண்ணம்" எனும் நூல். மனிதனின் அகவழி அல்லது புறவழி வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருப்பது எண்ணம். அந்த எண்ணத்தின் இயக்கத்தை அறிந்துகொண்டால் எதையும் எளிதில் வெற்றிபெறவும் , துன்பம் ஏற்படின் அதில் இருந்து எளிதில் வெளியேறவும் முடியும். எண்ணம் என்ற இந்நூல் எளிமையாக பாமரரும் புரிந்தகொள்ளும் விதமாக எண்ணத்தை செயல்பாட்டை விளக்குகிறது. உங்களை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் நிச்சயம் இந்த நூல் அதற்கு உதவும்.




உங்கள் பட்டியல் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும். அதனை வைத்துகொண்டு சரிபாருங்கள். இவையெல்லாம் எங்கு கிடைக்கும் என்று.




பிரபஞ்சம் பேசும் மொழி நீங்கள் பேசும் மொழி அப்படியெனில் பிரபஞ்சத்துக்கு ஆட்பட்ட எல்லாமும் உங்களுக்கு ஆட்பட்டது. பிறகு ஏன் பல விஷயங்கள் நமக்கு கிடைக்காதது போல் நாம் நினைத்து கவலையில் உழல்கிறோம்.

பதில் மிக எளிது. நாம் புலன் வழியில் சிந்திக்கிறோம். புலன் வழியில் செயல்கிறோம். நமக்கு தெரிந்த வாழ்க்கையில் இன்பம் என்றால் அது புலனின்பம் மட்டுமே.

ள்


கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
உணர்ந்தவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள்
வெளியே சொல்பவர்கள் எல்லாம் உணர்ந்தவர்கள் இல்லை. 



நம்ம ஊரு Life Coach
கணியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


இந்த வார வழிகாட்டுதல் நூல்

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...