Sunday, June 14, 2020

தவறு செய்துவிட்டீர்கள் சுஷாந்த் சிங் !


2017 ஆம் ஆண்டு நவம்பர் 26 என்று நினைவு. 
சென்னையில் ஒரு முக்கியமான வர்த்தக சந்திப்பு. அந்த மீட்டிற்கு வந்திருந்தால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள புராஜக்ட எனக்கு கிடைத்திருக்கும். அதில் எப்படியும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை லாபம் கிடைத்திருக்கும். பிறகு ஒரு நாள் அந்த நிறுவன தலைமை அதிகாரியை சந்திக்கும் போது நீங்கள் வந்திருக்கலாம் ராஜ்மோகன். நிச்சயம் நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு ஒரு புராஜக்ட் கிடைத்திருக்கும் என்று வருத்தப்பட்டார். 
என்னிடம் இன்னொரு நண்பர் " உங்களுக்கு பதிலாக நான் presentation செய்கிறேன் , கவலைவேண்டாம் ..பேருக்கு ஓரு ஆளை அனுப்புங்கள் என்றார். நானும் அவரின் அன்பின் உண்மையை நம்பி அதில் கலந்துகொள்ளாமல் இன்னொரு நண்பனை ( மாடசாமி மாரியப்பன் ) அனுப்பினேன். உங்களுக்கு ஒரு புராஜக்ட் என்று சொன்ன அந்த நண்பர் அவரே என்னுடைய புராஜக்டையும் சேர்த்து எடுத்துகொண்டார் . 
இப்படியெல்லாம் ஒருவரை நம்பலாமா ? நீயே வந்திருக்கலாமே ! அப்படி என்ன நீ கிழித்துகொண்டிருந்தாய் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு முதல் நாள் கோவா திரைப்பட விழாவில் இயக்குனர் சேகர் கபூரின் மாஸ்டர் கிளாஸ். 
கோவாவில் இருந்து மாலை நேர விமானம் கிடைக்கவில்லை. அதனால் மாலை 6 மணிக்கு அங்கிருந்து பெங்களூருக்கு பேருந்து. காலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு பிளைட். வந்திறங்கிய கையோடு Presentation கொடுக்க செல்ல திட்டம்.
ஆறு மணிக்கு தானே பஸ். ஒரு அரை மணிநேரம் Master Class கலந்துகொள்ளலாம் என்று உள்ளே நுழைந்த ஐந்து நிமிடத்தில் புத்தி மாறிவிட்டது. காரணம் Sushant Singh Rajput.
சேகர் கபூர் எனும் ஜாம்பவான் வாத்தியாராக அமர்ந்திருக்க. அவரின் எதிரே மாணவனாக சுஷாந்த் சிங். வழக்கமாக மாஸ்டர் கிளாஸ் என்றால் ஏற்படும் சோர்வு சற்றும் இல்லாமல் கலகலப்பான வகுப்பறையாக மாற்றிய பெருமை சுஷாந்திற்கு உண்டு. ஒரு முப்பது ஒரு வயது பையன் எதிரே எழுபது வயது ஆசான். அங்கே இருவருகும் இடையே தலைமுறை என்பதே இல்லை.
என் வாழ்க்கையில் கிடைத்த அருமையான பயிற்சி பட்டறை அதுவாக தான் இருக்கும். அந்த பயிற்சிக்கு ஈடாக எவ்வளவு கொடுத்தாலும் தகும். பின்னாட்களில் நான் அந்த ஐந்து லட்ச ரூபாய் புராஜக்டை இழந்ததற்கு பெருமைப்படும் அனுபவமாக மாற்றியது அந்த Master Class.
வகுப்புக்கு பிறகு சுஷாந்திடம் 5 நிமிடம் உரையாடினேன்
துறுதுறுப்பான குறும்புகார இளைஞர்
சிறுவயது முதல் நிறைய கஷ்டங்களை
சாதிக்கவேண்டும் என்ற வெறி அவரிடம் அதிகமாக இருந்தது
தமிழ் சினிமா மீது அத்தனை விருப்பம்
கமல்ஹாசனையும் மணிரத்னத்தையும் சிலாகித்தார்
சிவாஜி எம் ஜி ஆரை முழுவதும் தெரிந்துவைத்திருந்தார்
இலங்கை தமிழருக்காக இரக்கப்பட்டார்
ஒரு துடிப்பான ஈர்ப்புள்ள இளைஞர்.
ஆயுஷ்மான் குரானா போன்று அவருக்கும் ஒரு பிரேக் வரும் என்று நினைத்திருந்தேன். பாவம் அற்ப ஆயுளில் வாழ்க்கையை முடித்துகொண்டுள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்ந்து தான் தீர்க்கவேண்டும்
நாம் ஒவ்வொருவரும் ஒரு Return Ticket உடன் தான் வந்திருக்கிறோம் என்பார் வேதாத்திரி மகரிஷி
நமது பயணம் நிச்சயப்பட்ட ஒன்று அதனை தற்கொலை என்ற பெயரில் அவசரப்படுத்திகொள்வது எந்த வகையிலும் சரியில்லை.
மேடுபள்ளங்கள் கொண்டதுதான் பயணம்
அதனை முழுமையாக முடிப்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி
சுஷாந்த் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவை நான் வெறுக்கிறேன்
I am Sorry ! RIP...!

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...