Sunday, June 14, 2020

#letswinchennaipandemic

கொரோனா லாக்டவுன் அறிவித்த இரண்டொருநாளில் சென்னையில் நீண்ட நாட்களாக வசித்துவந்த நண்பன் ஒருவன் தனது கிராமத்திற்கு சென்று அங்கு அமர்ந்துகொண்டு நண்பா நீயும் கிராமத்திற்கு திரும்பிவிடு என்றான்.
என் கிராமம் என்பதை தவிர என் கிராமத்தில் எனக்கு என்ன இருக்கிறது ? சென்னையை தவிர வேறு இடமில்லை எனக்கு . எது நிகழ்ந்தாலும் அதை இங்கிருந்தே சமாளிப்பேன் என்றேன்.
இப்பொழுது கொரோனா பரவல் அதிகமாகிகொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராத சொந்தங்கள் எல்லாம் பல ஊர்களில் இருந்து போன் செய்து விசாரிக்கிறார்கள்.
உறவுகள் எங்கள் மீது கொண்டிருக்கும் கரிசனமும் அன்பும் நெகிழவைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
சென்னை எனக்கு எப்பொழுதும் ஒரு சோர்வை தரும் நகரம். இருப்பினும் நான் சென்னையை வெறுத்ததில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு எதிர்கால கனவுகளுடன் ஒரு அப்பாவி டீன் எஜ் பொடியனாக அந்த நள்ளிரவில் அண்ணாசாலை எல் ஐ சி நிறுத்தத்தில் நண்பர் நாராயணமூர்த்தியின் ( கண்ணன் ) கரம் பிடித்தபடி மலமலங்க விழித்தபடி வந்திறங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.
நான் என்ன இலக்குடன் வந்திறங்கினேனோ அந்த இலக்கில் தான் என்னை ஓடசெய்துகொண்டிருக்கிறது. சென்னை எனக்கு என்ன கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேனோ அதை கொடுத்துகொண்டுதான் இருக்கிறது இந்த வந்தாரை வாழவைக்கும் பெரும் நகரம்.
உண்மை என்னவெனில் சென்னைக்காரனாகிவிட்டால் அவன் எதைக்கண்டும் ஓடி ஒளியமாட்டான். அவனுக்கு பிரச்சனைகளை எதிர்கொண்டே பழகிவிட்டது. 
கொரோனாவுக்கு எதிராக நமது உடலின் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் முன்பே புத்தி அதனை எதிர்க்கதொடங்கிவிட்டது.
இந்த எழுபது நாட்களில் கொரோனாவுடன் பல direct encounters நடந்திருக்கிறது . எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அனுபவம் புத்திக்கு வலுவாகவே உறைத்திருக்கிறது.
வரலாற்றில் சென்னை எத்தனையோ தாக்குதல்களை பார்த்துவிட்டது. வந்தாரை வாழவைக்கும் பெருநகரம் இது.
யாரையும் வீழ்த்தியதில்லை ! எப்பொழுதும் வீழ்ந்ததில்லை !
சென்னை இந்த கொரோனாவை வெல்லும்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...