Monday, June 15, 2020

#LetsWinChennaiPandemic

கொரோனா தமிழ்நாட்டில் சுமார் 1.75 கோடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
நாளொன்றுக்கு 18 ஆயிரம் டெஸ்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. அதுவும் சென்னையை மையமாக வைத்து.
இது சென்னை அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தபட்டால் பெரும் பாதிப்புகள் தவிர்க்கபடும்.
சென்னையில் இரண்டாவது லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் ஒரு நகர்வு சென்னையை விட்டு சொந்த ஊரை நோக்கி நிகழ்கிறது. இது கொஞ்சம் ஆபத்தான ஒன்று. இங்கிருந்து செல்லும் Carrier கள் மாவட்டங்களில் மீண்டும் நோய் தொற்றை பரப்பும் சூழ்நிலையை உருவாக்க கூடும்.
அதனால் சென்னைக்குள் இருப்பவர்கள் சென்னையிலேயே இருக்கவேண்டும்.
ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்
உடல்தூய்மை
இருப்பிட தூய்மை
சமூக இடைவெளி
தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது
தனித்திருத்தல்
வெளியே சென்றால் முகவுறை அணிவது
இவற்றை பின்பற்றினால் போதும் சென்னையிலேயே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அடுத்து நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒன்று இயன்றவரை இல்லாதவர்களுக்கு உதவி. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதின் மூலம் அவர்களின் ந்கர
நம்மில் மூன்று நிலையில் பொருளாதார சூழ்நிலை கொண்டவர்கள் இருக்கிறோம்.
முதல் நிலை
என்னுடைய தேவையை என்னால் பார்த்துகொள்ள முடியும். என்னால் இன்னொருவருக்கும் உதவி செய்ய முடியும்.
இரண்டாம் நிலை
என்னுடைய தேவையை மட்டுமே என்னால் பார்த்துகொள்ள முடியும். பிறர் தேவைகளை பார்த்துகொள்ளும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை
மூன்றாம் நிலை
இன்று பணிக்கு சென்றால் தான் எனக்கு என் தேவையை பார்த்துகொள்ள முடியும் 
இந்த மூன்றாம் நிலை மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு நகர்வை மேற்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கான தேவைகளை இரண்டாம் நிலை மனிதர்கள் செய்யும் போது இவர்கள் நகர்வு தடுக்கப்படும். 
ஒரு நான்கு வாரங்களுக்கு சென்னையில் தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் உதவி வீட்டிலேயே இருக்க செய்வோம்.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு 500 மீட்டர் சுற்றளவில் நமது கண்காணிப்பை தொடர்வோம். அங்கு கொரோனா பரவல் இருந்தால் விரைவில் சரியாக உறுதுணைபுரிவது
மீண்டும் கொரோனா பரவாமல் நகர்வுகளை தடுப்பது
உதவி தேவைப்படுவோருக்கு என்னவிதமான உதவி என்பதை கண்டுபிடித்து அதனை உதவி செய்யும் நிலையில் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ளவர்களிடம் பெற்று செய்வது . இந்த மூன்று செயல்களை செய்தாலே முற்றிலும் கொரோனா பரவலை கட்டுபடுத்திவிடலாம்.
இப்படி ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர் பொறுப்பேற்றுகொண்டால் கொரோனாவை துல்லியமாக ஒழிக்கமுடியும்.
கொரோனா எதிர்ப்பு மக்கள் இயக்கமாக உருவெடுக்கவேண்டும். இதனை கட்டுப்படுத்துவதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.
நான் கொரோனா தாக்குதலில் இருந்து என்னை தற்காத்துகொள்வேன் . கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க என்னால் இயன்ற உதவிகளை செய்வென் என்ற உறுதிமொழியை எடுப்போம். இந்த நோய் தொற்றை முற்றிலும் ஒழிப்போம்

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...