Saturday, June 13, 2020

அதிகரிக்கும் ஆன்லைன் வகுப்புகள் கொடிகட்டும் கல்வி வியாபாரம் ?


கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இன்றி சென்றடைய வேண்டும். ஆனால் நமது துரதிஷ்டம் இங்கு அது மிகப்பெரிய வியாபாரமாக உருவெடுத்து நிற்கிறது.
https://youtu.be/zrePkBRuAno

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது எல்லா கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு தயாரான நிலையில் மாணவர்களுக்கு இது பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்தது. அப்பொழுது முன்மொழியப்பட்ட உருப்படியான யோசனை ஆன்லைன் மூலம்  இந்த மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்ப்பது. இது உண்மையில் பல மாணவர்களுக்கு பலன் தந்தது. ஓரளவுக்கு மாணவர்களுக்கு புரிதலும் ஏற்படுத்தபட்டது.
தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. பத்தாம் வகுப்புபதினோறாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.
வழக்கமாக ஜூன் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கிவிடும்.  கொரொனா லாக்டவுன் தொடர்வதால்  இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இவ்வாண்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய காலத்தில் பாடத்தை தொடங்கினால் தான் சரியாக காலத்தில் முடித்து தேர்வுக்கு தயார் செய்யமுடியும். இரண்டு மூன்று மாதம் தாமதம் செய்து தொடங்கும் போது அதுவே பாடசுமையாகிவிடும். எனவே தற்போது அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க தொடங்கிவிட்டன பள்ளிகள். இது வரவேற்கதகுந்தது தானே என்று யோசிப்போம். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்பை காரணமாக வைத்து பல பள்ளிகள் புதிய வகையில் கல்லா கட்ட தொடங்கியிருக்கின்றன. கணிணி பற்றிய புரிதல் கொண்ட பிள்ளைகளிடம் அதாவது வயது முதிர்ந்த பிள்ளைகளிடம் ஆன்லைன் மூலம் கற்பிப்பது சரியானதுதான். ஆனால் மூன்று -நான்கு வயது Pre-KG பிள்ளைகளுக்கும் ஆன்லைன் வகுப்பு என்று களமிறங்கி இருப்பது பெற்றோர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே Term fees வசூலித்த நிலையில் Online Class க்கு என்று புதிய கட்டணங்களும் கட்டாயமாக வசூலிப்பதாக பெற்றோர்கள் சொல்கின்றனர்.
ஆன்லைனில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டிய நிலை இப்பொழுது இருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்கள் வழங்கும் SmartClass இதில் பொருந்தாது. அங்கு பெரிய வணிகநோக்கம் இல்லை. 
         பச்சிளங்குழந்தைகளை இப்படி கணிணி முன்னால் கட்டுபடுத்தி வைப்பது மேலும் அவர்களுக்கு மனசோர்வை தரும். ஆன்லைன் வகுப்புகளை நெறிபடுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...