Friday, January 17, 2020

சென்னை புத்தக கண்காட்சி - 2020 - 3

சென்னை எனக்கு பரிச்சையமான காலத்திலேயே சரவணனும் எனக்கு பரிச்சையமாகிவிட்டான். நானும் அவனும் தினந்தோறும் பார்த்துகொண்டிருக்கமாட்டோம். அவன் ஒரு பக்கம் ஓடிகொண்டிருப்பேன். நான் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருப்பேன். இருவரும் சந்திக்கும் போது நகையும் சதையுமாக எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பது போன்றே ஒரு இடைவெளியற்ற தன்மையுடன் எங்களுக்குள்ளான உணர்வுகள் இருக்கும்.
அதே போல் சரவணனை பெரும் கூட்டத்தில் நிறுத்தி வைத்தாலும் தனக்கான தனித்துவத்துடன் தெரிவான். எந்த விஷயத்திலும் அவனின் பார்வை புதிதாகவே இருக்க்கும். நம்மை சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிப்பதில் சரவணனுக்கு நிகர் சரவணனே !
அவனின் ஐந்து முதலைகளின் கதை இது வரை தமிழ்நாட்டில் யாருமே யோசித்து பார்க்காத களம்.
ரோலாக்ஸ் வாட்சி அரசியல் களத்தின் சாணக்கியர்களையும் சதிகாரர்களையும் பேசியது
லகுடு மூலம் சூது வாது பேசியவன் சுபிட்ச முருகனில் ஏலேய் ! எனக்கு ஆன்மீகம்னா என்னனு தெரியும்லே என்று உரக்க கூவியிருக்கிறான்.
வழக்கமாக எல்லோரும் இந்த வருஷம் என்ன புக் போட்டிருக்கே என்று தான் கேட்பார்கள். சரவணனிடம் மச்சி ! இந்த மாசம் என்ன புத்தகம் என்று தாராளமாக கேட்களாம்.
பரபரவென பதிமூன்று நூல்கள் எழுதிவிட்டான்.
அத்தனையும் ஒன்றுகொன்று மாறுபட்டது
சுவைமிகு உணவகத்தில் நீங்கள் ஒரு பபே விருந்துக்கு சென்றால் எதை விடுவது எதை சாப்பிடுவது என்று ஒரு தடுமாற்றம் வருமே. அது போன்று ருசிகாட்டும் எழுத்து. வளவள கொழ கொழ இல்லை.
புத்தகத்தை எடுத்தால் ( Kindle கூட ) படித்துவிட்டு வைக்க செய்யும் லாவகமான வரிகள் .
சரவணின் latest வையிலைவேற் காளை. முப்பது கட்டுரைகள் அடங்கிய வாழ்வியல் தொகுப்பு. ஒவ்வொன்று ஒரு புது மனிதரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவர்கள் அனைவரும் நமக்கிடையே நம்முடன் உலாவும் ஜீவன்கள்தான். ஆனால் நாம் அவர்களை எத்தனை தூரம் கவனித்து இருப்போம் என்பது ஐயம்தான். அவர்களின் வாழ்வியலை கூர்மையாக கவனித்து பதிவு செய்திருப்பது சிறப்பு. இது அனைவருக்குமானது எனினும் சினிமா பயில்பவர்களுக்கு கூடுதலாக உதவுகூடியது
திரைக்கதையில் Character வடிவமைப்பு அதாவது கதாபாத்திர வடிவமைப்பு மிக அவசியம். தமிழ்படங்களில் பாதிப்படங்களில் கதாநாயகி வெள்ளைக்கோட்டுடன் டாக்டராக வருவதும், நாயகன் பொறுக்கி தின்னுகொண்டு அவளை துரத்த செய்து காதலிப்பதும் தான் அதிக பட்ச கதாபாத்திர அமைப்பு.
"வையிலைவேற் காளை " கதாபாத்திரங்களை பற்றி பேசுகிறது.
இதை படித்து முடிக்கும் போது உங்களுக்கு பிடித்த நீங்கள் பார்த்த உங்களை பாதித்த பாத்திரங்கள் உங்களுக்கு நினைவுக்கு வரும். அவர்களை உங்கள் படைப்புக்கு எப்படி Mapping செய்யலாம் என்பது உங்களுக்கு இயல்பாகவே தெரியும்.
வையிலைவேற் காளை நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று. Pure Cinema வின் இன்னொரு அங்கமான கருப்பு பதிப்பகத்தின் வெளியீடு. Pure Cinema அரங்கம் மற்றும் அனைத்து அரங்கங்களிலும் கிடைக்கிறது.
அலைந்து திரிந்து கஷ்டப்படாமல் எளிதில் பெற
அரங்கம் எண் : 198
நாதன் பதிப்பகம்
10% சிறப்பு கழிவு உண்டு

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...