Friday, January 17, 2020

சென்னை புத்தக கண்காட்சி 2020 - 1

நேற்று இரண்டு சின்ன தம்பிகள் நாதன் அரங்கமான எண் 198 ற்கு வந்தார்கள்.சின்ன லிஸ்டை வைத்துகொண்டு இரண்டு மூன்று சினிமா சார்ந்த நூல்களை எடுத்தவர்கள் நேராக காட்பாதர் நூல் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தார்கள்.ஒருவன் புத்தகத்தை உற்றுப்பார்த்த்து சிறிது யோசித்தவன் அதனை எடுத்து Left, Right, Straight என்று திருப்பினான். அடுத்து அருகில் இருப்பவனிடம் கிசுகிசுவென ஏதோ பேசினான். அந்த பொடியனும் புத்தகத்தை வாங்கி Left Right Straight என திருப்பினான். சற்று இடைவெளியில் நின்றுகொண்டிருந்த எனக்கு சுவரஸ்யம் கூடியது. என்ன பேசப்போகிறார்கள் என்று கேட்க சற்று அருகில் சென்று நின்றேன்.
"நெட்லேயே தமிழ் வெர்ஷன் இருக்கு மச்சி..."
" சாரு..இந்த புத்தகத்தை வாங்கி படிக்க சொன்னாருடா....!"
( அவன் சாரு என்று சொன்னது அவன் வாத்தியாரை )
" ஆனா...தமிழ்லேயே படம் கிடைக்கிறப்போ...இது வேஸ்ட்டுடா....நெட்ல பார்த்து அப்படியே டைப் பண்ணியிருப்பாங்க.....அதுக்கு நாம் படத்தையே டவுன் லோட் செய்து பார்த்துடலாம்...."
முதலாமவன் புத்தகத்தை நேராக ஷெல்பில் வைத்துவிட்டு நகர்ந்துவிட்டான். நேராக பில் கவுண்டருக்கு சென்று எடுத்த மூன்று புத்தகங்களை மட்டும் பில் போட சொன்னான். ஒரு பத்து வினாடி இருக்கும் என்ன நினைத்தானோ மீண்டும் ஷெல்ப் பக்கத்தில் வந்து காட்பாதர் புத்தகத்தை எடுத்துகொண்டான்.
" ஹேய்...இதையும் வாங்கிடலாம்டா......சார் சொன்னா சரியா இருக்கும்....அப்படியெல்லாம் தமிழ் வெர்ஷனை காப்பி செய்து எழுதிந்தா சார் சொல்லியிருக்கமாட்டார்......" என்றவன் அடுத்து ஐந்து நிமிடம் மீண்டும் Left Right Straight என்று புரட்டினான் 
அவன் என்ன செய்யப்போகிறான் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்தேன். ( அடையாளமற்று இருப்பது எத்தனை வசதியாக இருக்கிறது ?!!! )
மீண்டும் இருவரும் கிசுகிசுவென விவாதித்தனர் . இப்பொழுது முன்னவன் சொன்ன ஏதோ ஒரு தகவலில் இரண்டாமவனுக்கும் பரம திருப்தி . ( புத்தகத்தில் ஏதோ அவனுக்கு பிடித்தமான ஒரு பாயிண்டை கண்டுபிடித்துவிட்டான் )
மற்ற மூன்று புத்தகங்களோடு காட்பாதர் பில்லிங் கவுண்டருக்கு நகர்ந்தது. 
காட்பாதரின் வாழ்க்கை போன்றே அந்த நூலின் நகர்வும் பல திருப்பங்களுடன் செல்கிறது. 2015 ஆம் ஆண்டின் உலக தமிழராய்ச்சி நிறுவனத்தின் "சிறந்த மொழிபொயர்ப்பு" க்கான விருது பெற்ற நூல் " காட்பாதர் "
இன்று வரை உலகின் பல திரைக்கதைகளுக்கு Blue Print காட்பாதர் திரைப்படம்தான். மூலத்தின் சாரம் துளியும் குறையாமல் மொழியாக்கம் செய்யப்பட்டது. படித்தவர்கள் படத்தின் பரப்பரப்பு சற்றும் குறையாமல் ஒரு நாவலை படிக்கும் மகத்தான அனுபவம் தருகிறது என்று சொல்கிறார்கள். அதே நேரம் திரைக்கதையின் வடிவத்தை எளிதில் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்கிறார்கள். மனம் நிறைய மகிழ்ச்சியும் நன்றியும் !
பெரும்பாலும் இந்நூலை பரிந்துரைப்பவர்கள் ஊடகபள்ளிகளின் ஆசிரியர்கள் பெருமக்கள். அனைவருக்கும் நன்றி !
காட்பாதர் நூல் இரண்டாம் பதிப்பு விற்பனையில்
அரங்க எண் : 198
நாதன் பதிப்பகம்

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...