Saturday, January 4, 2020

Dental Hypnosis என்றால் என்ன ?


            இரண்டு நாட்களுக்கு முன்பு Dental Hypnosis Course   பற்றிய ஒரு அறிவிப்பை முகநூலில் பகிர்ந்திருதேன்.பல நண்பர்கள் அப்படியென்றால் என்ன என்று கேட்கிறார்கள். நிறைய பேருக்கு ஹிப்னோஸிஸ் பற்றி நல்ல புரிதல் இருக்கிறது. அதே நேரம் பலருக்கு அது குறித்து ஒரு தவறான புரிதலும் இருக்கிறது. ஹிப்னோஸில் என்றால் ஏதோ வசியப்படுத்துதல் அதாவாது ஹிப்னாடிசம் தெரிந்தால் யாரை வேண்டுமானாலும் வசியபடுத்திவிடலாம். அப்படி செய்து வாடா ராஜா ! என்று அழைத்தால் பூம்பூம் மாடுபோல வசியப்பட்டவர் தலையாட்டிகொண்டு வந்துவிடுவார் என்றெல்லாம் நினைத்துகொண்டிருக்கிறார்கள்.Dental Hypnosis பற்றி சொல்வதற்கு முன்பு இந்த ஹிப்னாடிஸம் பற்றிய புரிதலை முதலில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 
ஹிப்னோடிசம் என்பது ஒரு உளவியல் சிகிச்சைமுறை. அதாவது ஒருவரின் ஆழ்மனதோடு தொடர்புகொண்டு அங்கு பதிந்து  இருக்கும் வாழ்க்கைக்கு ஒவ்வாத தகவல்களை மாற்றி அமைப்பது. அதாவது அச்சம்பயம்,குழப்பம் இப்படி பல நெகடிவ் எண்ணங்களை பாசிடிவ் எண்ணங்களாக மாற்றி ஒருவரின் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் முறைதான் இந்த ஹிப்னாடிஸம். இவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சைக்கு உள்ளாகும் நபர் ஒருவித மயக்க நிலைக்குகொண்டு செல்லப்படுவார். அதாவது அறுவைசிகிச்சைக்கு முன்பு நாம் Anaesthesia தருவோமே அது போன்று. ஆனால் இங்கு எந்த மருந்தோ வேதிப்பொருளோ இல்லாமல் ஹிப்னோடிஸ்ட் அந்த நபரை குறிப்பிட்ட யுக்தியின் மூலம் தூக்கநிலைக்கு கொண்டு சென்று அவரின் ஆழ்மனதோடு தொடர்புகொண்டு இந்த நெகடிவ் பதிவுகளை மாற்றி அமைப்பார். அதாவது Reprogramming செய்வார். இது ஒரு சில நிமிடங்கள் நிகழும் பின்னர் சிகிச்சை பெறுவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார். இதுதான் ஹிப்னோடிஸ சிகிச்சை. 
எல்லா அறிவியல் முறைகளிலும் இருக்கும் வளர்ச்சியை போன்றே ஹிப்னோடிசத்திலும்  உயரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நாள்தோறூம் உலகமெங்கும் ஹிப்னோடிஸ்டுகள் புதிய புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இதில்  ஒருவகைதான் Hypno Anasthesia. 
அதாவது ஹிப்னோடிஸம் மூலம் வலியை மறக்க செய்தல். குழந்தை பேறுசிறு சிறு அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் வலியை நோயாளி உணராமல் இருக்க அவருக்கு இந்த மயக்கமருந்துகொடுப்பது வழக்கம். இதில் பக்கவிளைவுகள் இருப்பதாக அறிவியல் அறிஞர்களே ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் இந்த ஹிப்னோ அனஸ்தீஷியா மூலம் பக்கவிளைவுகளற்ற மயக்கநிலைக்கு நோயாளியை கொண்டு செல்லமுடியும். ஒரு தேர்ந்த ஹிப்னாடிஸ்ட் இதனை மிக சாதரணமாக செய்துவிடுவார். இரமண மகரிஷிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவர் மயக்க மருந்து எடுத்துகொள்ளாமல் தனக்கு நிகழ்ந்த அறுவை சிகிச்சையை தானே பார்த்து இரசித்தார் என்று அவரின் பக்தர்கள் சிலாகிக்க கேட்டிருக்கிறோம் அல்லவா ? அந்நிலையில் பகவான் SelfHypnosis மூலம் தனக்கு தானே Hypno Anasthesia நுட்பத்தை பயன்படுத்தியிருக்க கூடும்.
            பல் சிகிச்சையின் போது இந்த Anasthesia  பயன்பாடு மிக சகஜம். அந்த நேரத்தில் ஹிப்னோ அனதிஸ்யா கொடுத்தால் மருந்துகள் இல்லாமலேயே வலியின்றி பல் சிகிச்சை மேற்கொள்ள முடியும். இதைதான் Dental Hypnosis என்கிறார்கள். இதுகுறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு பெங்களூர் மற்றும் புனேயில் நடைபெறுகிறது. பயிற்சி தருபவர் பெரில் கோமர் அம்மையார் ( Beryl Comar )
            யார் இந்த பெரில் கோமர் ?
NLP மற்றும் ஹிப்னோதெரபியில் சுமார் 30 வருடங்கள் அனுபவம் பெற்ற பெரில் கோமர் ஸ்பெனியை சேர்ந்தவர். ஹிப்னோதெரபி மற்றும் NLP சேவைகளுக்கான பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிகுவித்திருக்கிறார். இந்த Hypndontics எனப்படும் பல்சிகிச்சை சார்ந்த ஹிப்னோடிஸைஸ் முறையில் பல ஆராய்ச்சிகளும் சாதனைகளும் புரிந்துள்ளார். இப்பொழுது முதல் முறையாக Basix Inc பயிற்சி மையத்துடன் இணைந்து இந்தியாவில் இரண்டு இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகளை எடுக்கவுள்ளார்.கோமர் அம்மையார் பற்றி மேலும் நம்பிக்கை பெற ( https://www.hypnobizaustralia.com/beryl-comar-2/) இந்த சுட்டியில் மேய்ந்து பாருங்கள்.

யார் எல்லாம் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம் ?
தொழில்முறை சைக்காலஜிஸ்ட்ஹிப்னோதெரபிஸ்ஹிப்னோடிஸ்ட் மற்றும் பல் மருத்துவர்களுக்கு பயனுள்ள பயிற்சி இது. நிச்சயம் பலன் தரக்கூடியது உங்களின் தொழில்திறனை மேம்படுத்த கூடிய பயிற்சி இது.

கட்டணம் உண்டா ?
ஸ்பெயினில் இருந்து அந்த அம்மையார் பறந்து வந்து தங்கி இங்கு பயிற்சி அளிக்கவேண்டும். அவரின் பயணசெலவு தங்குமிடம் கொஞ்சம் குரு தட்சணை தரவேண்டுமல்லவா ? மேற்கத்தியர்கள்  இந்தியாவில் உடலும் மனமும் வருந்தாமல் தங்கவேண்டும் எனில் அவர்களை கண்ணும் கருத்துமாக நாம் கவனித்துகொள்ளவேண்டும். அதற்கான சிறுதொகையை சரிகட்டும் விதத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி உணவுஉபசரிப்புபயிற்சி உபகரணங்கள் உட்பட நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்

Basix Inc
No.422, 7th Main Road, A Block, Milk Colony,17th Cross, Malleswaram West, Bangalore -560055 . Mobile : +91 9886420936 Email : info@basixinc.org

Basix Inc நிறுவனம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக உளவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை உலகம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் டாக்டர் சி ஜே ஜெயச்சந்தர் தான் ராஜ்மோகனாகிய எனது  ஹிப்னோதெரபி குரு . நான் எழுதும் உளவியல் கட்டுரைகளுக்கான விதை இவர் விதைத்து.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...