Friday, January 10, 2020

வெற்றிடம் வெற்றி தரும்

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 6
ராஜ்மோகன்





ஓட்டம் என்பது வளர்ச்சி. தேக்கம் என்பது தளர்ச்சி. நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கீறீர்களா ? இல்லை பிறர் மனத்தாக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா ? என்பதை ஒரு சின்ன பயிற்சி மூலம் பார்த்துவிடுவோமா ? இதற்கு என்று சில மணித்துளிகள் நீங்கள் செலவழிக்க தயாராக இருக்கவேண்டும். ஒரு பேப்பரையும் பென்சிலையும் எடுத்துகொள்ளுங்கள்.


உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பட்டியலிடுங்கள்.குண்டூசியில் இருந்து நகைவரை அனைத்தையும் பட்டியலிடுங்கள். முறையாக வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்பவர்கள் பலர் இவ்வாறு தங்களிடம் இருக்கும் பொருட்களை ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்து வைத்திருப்பார்கள். அவ்வாறு நீங்கள் குறித்துவைத்திருந்தால் நீங்கள் ஒரு புத்திசாலி. அந்த பழக்கமே எனக்கு இல்லை என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் நீங்கள் யார் என்று நீங்களே யுகித்துகொள்ளுங்கள்.


என்ன எழுதியாயிற்றா ? சரி இப்பொழுது அந்த பட்டியலை பாருங்கள். அந்த பொருட்களை உண்மையில் நான் முழுமையாக உபயோகப்படுத்துகிறேன் என்று நீங்கள் நினைக்கும் பொருட்களை தனியாக வைத்துவிடுங்கள். சில பொருட்களை எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது. உதாரணத்திற்கு ரெயின்கோட், குடை, ஸ்வெட்டர் இத்தியாதிகள். அதனை தனிப்பட்டியலாக வைத்துவிடுங்கள். ஆனால் அன்றாடம் பயன்படுத்த உகந்த ஆனால் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொருட்களை பட்டியலிடுங்கள். நிச்சயம் உங்கள் பட்டியலில் சில நல்ல புத்தகங்கள் இருக்ககூடும். நானும் அப்படிதான். இது தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது ?


பயன்படுத்துவோம் என்று எண்ணி வாங்கி அதனை பயன்படுத்தாமல் இருப்பது ஒரு மோசமான தேக்கநிலை . நீங்கள் உங்கள் பணத்தை வீணடிப்பதோடு அடுத்தவருக்கு கிடைக்கவேண்டிய ஒன்றை தட்டிபறித்து வைத்திருக்கிறீர்கள்.
மிக உயர்ந்த தத்துவஞானிகள் இப்படி சொல்வார்கள். உங்கள் தேவை போக உங்கள் பக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாய் அடுத்தவன் காசு. இந்த பிரபஞ்சம் உலகில் எல்லாருக்கும் சமமாகவே எல்லாவற்றையும் வழங்குகிறது. 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை  - என்றார் திருவள்ளுவர்.


இருக்கும் அறங்களிலேயே உயர்ந்த அறம் நமக்கு கிடைத்தவற்றை கிடைக்கபெறாதவர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களையும் காப்பதுதான் என்பது இதன் பொருள்.நாம் எல்லோரும் அறிந்ததுதான். நாம் இந்த அளவிற்கு உயர்ந்து சிந்திக்க தேவையில்லை. நமது தேவை எதுவோ  அது அவரவர் மனோநிலை மற்றும் வாழ்வியல் பொறுத்தது. ஆனால் தேவை இதுதான் என்று ஒரு முடிவுக்கு வரவேண்டும். அந்த தேவையை நிறைவேற்றிகொள்ள திறமை, காலம், சூழல் ,இயற்கையின் ஒத்துழைப்பு இவையெல்லாம் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். இங்கு தான் பிரபஞ்சத்தின் இணைப்பு நமக்கு தேவைப்படுகிறது.
நாம் பசிக்கும் பொழுது உணவு உண்ணுகிறோம். வயிறு நிரம்பியவுடன் நம்மால் உண்ண முடியவில்லை . இருப்பினும் நமக்கு பிடித்த சுவையான ஆரோக்கியமான உணவு நம் முன்னால் இருக்கிறது. ருசிக்காக அளவை மீறி உண்ணும் பொழுது என்ன நிகழ்கிறது. எந்த உணவு ஆரோக்கியம் தருமோ அதுவே அஜிரணமாக மாறுகிறது. எது சுவையாக இருந்ததோ அதுவே நாற்றமுடன் வெளியேறுகிறது. ஓட்டம் இல்லாமல் தேக்கம் இருந்தால் இதுதான் நிலை.
வாழ்க்கையில் உண்மையில் முழுமையை அடையவிரும்புகிறீர்கள் எனில் முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு பயன்படாத உங்களுக்கு பயன் தராத விஷயங்களை அப்புறப்படுத்துவது.  இங்கும் அகம் புறம் என்று இருநிலைகளில் செயல்படவேண்டும். அகவாழ்க்கை சீரமைப்பை பிறகு பார்க்கலாம் . புறவாழ்க்கையில் நீங்கள் பட்டியலிட்ட பொருட்களை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்துங்கள்' 
  1. என்னிடம் மிகையாக இருக்கிறது. 
  2. எனக்கு இது தேவைப்படாது
  3. இதை ஏன் வாங்கினேன் என்றெ தெரியவில்லை
  4. போதுமான வகையில் பயன்படுத்திவிட்டேன் இது எனக்கு உதவாது
  5. இது இடத்தை அடைத்து வைத்துகொண்டிருக்கிறது


இப்படி நீங்களே வகைப்படுத்துங்கள். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அதனை விற்று காசாக்கிவிடலாம். அதற்கென பிரத்யோக வலைத்தளங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அதில் கிடைக்கும் தொகை சின்னதொகையாக கூட இருக்கலாம் அதனை அடிப்படையாக வைத்து பெரிய தொகையை உருவாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியும். புத்தகங்களை நல்ல நூலகத்திற்கு தரலாம். ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்ற பயன்படுத்துவதை போல் உங்களுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்தை அந்த நூல்கள் இன்னும் பலருக்குள் பாய்ச்சும்.
எனக்கு பணம் எல்லாம் தேவையில்லை. இது யாருக்கேனும் உதவினால் போதும் என்ற எண்ணம் வந்தால் . நீங்கள் Power of Gratitude அதாவது நன்றி பாராட்டுதல் சக்தியை தூண்டிவிடுகிறீர்கள் என்று அர்த்தம். ஆம் ! நீங்கள் ஒருவருக்கு உதவும் பொழுது அவரிடம் இருந்து எழும் நன்றியுணர்வும் உங்களுக்குள் எழும் மகிழ்ச்சியும் இருதரப்பிலும் மேம்பட்டு பிரபஞ்ச  சக்தியை கூடுதலாக உங்களுக்குள் பாய்ச்சும். இதைதான் ஒவ்வொரு உளவியல் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள் கூவி கூவி சொல்கிறாள். நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பெற்றுகொண்ட பிறகு நன்றி சொல்கிறோம். ஆனால் உண்மையில் நமது உடல் பொருள் ஆவி இம்முன்றும் ஒருமித்து சொல்கிறோமா என்பது சொல்லும் அவரவர் மனசாட்சிக்கு தான் தெரியும் . ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த நன்றி பாராட்டுதலை ஒருவிழாவாகவே எடுத்துகொண்டாடுவதின் நோக்கம் இதன் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் பிரபஞ்ச இயக்கத்தூண்டுதல் தான் காரணம்.
பிரபஞ்ச சக்தியை கிரகித்துகொள்ள இதையெல்லாமா செய்யவேண்டும் என்று கேட்டால் நிச்சயம் செய்யவேண்டும். உதாரணமாக ஒரு பொருளை எடுத்துகொள்ளுங்கள். அதனை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள். அதனை பார்க்கும் பொழுதுதெல்லாம் என்ன தோன்றும். இது வேறு சும்மா கிடக்கிறது. அல்லது காசு இல்லாத நேரத்துல இதையெல்லாம் வாங்கி வீணடித்துவிட்டேன். இப்படி ஒரு எண்ணம் எப்பொழுதாவது உங்கள் மனதில் ஏதாவது ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது எழுந்திருக்கிறதா ? உண்மையாக சொல்லுங்கள்.
ஆம் ! எழுந்திருக்கிறது என்பதுதான் பெரும்பாலோனோரின் பதிலாக இருக்கும். அப்பொழுது என்ன நிகழ்கிறது தெரியுமா ? உங்கள் மனதில் எழும் அந்த வருத்த அலை, அது பெரும் பாதிப்பு தராத சிறிய வருத்த அலையாக இருந்தாலும் கூட உங்களை சுற்றியுள்ள பிரபஞ்ச வட்டத்தை சின்னதாக தொந்தரவு செய்கிறது. அந்த எண்ணம் ஒவ்வொரு பொருட்களை பார்க்கும் பொழுது எழும்பொழுதெல்லாம் அந்த அலை திரும்ப திரும்ப பிரபஞ்ச வட்டத்தில் ஊடுருவி மேலும் மேலும் வலுவாக்கி உங்களுக்கும் பிரபஞ்ச இணைப்பிற்கும் இடையே சுவறாக அமைகிறது. ஏதோ ஒரு பயன்படுத்தாத சின்ன பொருள் சேர்ந்து பின்னாட்களில் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களைவிட பயன்படுத்தாமல் தேங்கி கிடக்கும் பொருட்களே அதிகம் இருக்கும் ஒவ்வொரு விட்டிலும். இப்படி புறத்தில் நிகழும் செயல்பாடுகள் அகத்திலும் பிரதிபலிக்க தொடங்கும். நமக்கு பலன் தராத எண்ணங்களுக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தர தொடங்குவோம்.
நீங்கள் பயன்படாத ஒன்றை அப்புறப்படுத்தி ஏற்படுத்தும் வெற்றிடம் பிரபஞ்ச சக்தி ஊடுருவி நிற்க நீங்கள் ஏற்படுத்தி தரும் Positive Storage Centre. அதே நேரம் உங்களிடம் பயன்படாத பொருளை அது தேவைப்படும் ஒருவருக்கு தரும் பொழுது அங்கு உங்கள் Gratitude கான பலன் உடனடியாக திரும்பி வரும்.  இதன் மூலம் என்னவெல்லாம் நல்ல மாறுதல்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும் தெரியுமா ? உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ளவர்களுக்குமான நல்லுறவு வலிமையாகும். புதிய உறவுகள் கிடைக்கும். அது உங்கள் அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் உதவும். நான்கு நபர்கள் உங்கள் மீது நன்மதிப்பு வைத்திருக்கும் பொழுது அவர்களின் பாசிடிவ் எண்ண அலைகள் உங்கள் உடல் நலனையும் மனநலனையும் ஆக்கபூர்வமாக ஆக்கும். உங்கள் மனவலிமை அதிகரிக்கும் பொழுது  உங்கள் எண்ண அலைச்சூழல் எப்பொழுதும் ஆல்பா ( Alpha Waves ) நிலையிலேயே இருக்கும் . ஆல்பா அலைச்சூழல் தான் எப்பொழுதும் நல்ல விஷயங்களை ஈர்த்து தருவது. அதாவது உங்களை சுற்றி நல்லவர்களையே வைத்திருக்கும். சிவாஜி படத்தில் ரஜினி சொல்வாரா Rich Become Richer ; Poor became Poorer. அதே போன்று Positive Attracts Postive Things. இப்பொழுது Breaking the habit of being yourself எழுதிய டாக்டர் ஜோ டிஸ்பென்சராவின் இன்னொரு கூற்றுக்கு வருவோம் . " காலையில் எழுந்தவுடன் உங்கள் மனம் பாசிடிவான விஷயங்களை ஈர்க்கிறதா ? நெகடிவ் விஷயங்களை ஈர்க்கிறதா ? இவ்வாறு எண்ணம் எழவதற்கு காரணம் நீங்கள் தான் என்பதை நீங்கள் ஏற்றுகொள்கிறீர்களா ? இவ்வாறான எண்ணங்களை உங்களை சுற்றியுள்ள விஷயங்களை மாற்றி அமைப்பதின் மூலம் நீங்கள் மாற்றிகொள்ளமுடியும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ?
ஆம் ! புறவாழ்க்கையில்  தேவையற்றதை பட்டியிலிட்டு  முறைப்ப்படுத்துவதை பற்றி பார்த்தோம். அகவாழ்வில் எது தேவை ? எது தேவையற்றது என்பதை எப்படி கண்டுபிடிப்பது.  மிகவும் எளிது. உங்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் நெகடிவ் சிந்தனை எது ? அது எதுவாக இருந்தாலும் சரி ஒரு துண்டு பேப்பரில் குறித்துவைத்துகொள்ளுங்கள். என்னிடமோ யாரிடமோ பக்ரிந்துகொள்ளவேண்டாம். அது பரம ரகசியமாக இருக்கட்டும். அந்த ரகசியத்தை ரகசியாமாக சரி செய்வோம்.


( பிரபஞ்சம் பேசும் )

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...