Monday, June 15, 2020

#LetsWinChennaiPandemic

கொரோனா தமிழ்நாட்டில் சுமார் 1.75 கோடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
நாளொன்றுக்கு 18 ஆயிரம் டெஸ்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. அதுவும் சென்னையை மையமாக வைத்து.
இது சென்னை அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தபட்டால் பெரும் பாதிப்புகள் தவிர்க்கபடும்.
சென்னையில் இரண்டாவது லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் ஒரு நகர்வு சென்னையை விட்டு சொந்த ஊரை நோக்கி நிகழ்கிறது. இது கொஞ்சம் ஆபத்தான ஒன்று. இங்கிருந்து செல்லும் Carrier கள் மாவட்டங்களில் மீண்டும் நோய் தொற்றை பரப்பும் சூழ்நிலையை உருவாக்க கூடும்.
அதனால் சென்னைக்குள் இருப்பவர்கள் சென்னையிலேயே இருக்கவேண்டும்.
ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்
உடல்தூய்மை
இருப்பிட தூய்மை
சமூக இடைவெளி
தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது
தனித்திருத்தல்
வெளியே சென்றால் முகவுறை அணிவது
இவற்றை பின்பற்றினால் போதும் சென்னையிலேயே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அடுத்து நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒன்று இயன்றவரை இல்லாதவர்களுக்கு உதவி. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதின் மூலம் அவர்களின் ந்கர
நம்மில் மூன்று நிலையில் பொருளாதார சூழ்நிலை கொண்டவர்கள் இருக்கிறோம்.
முதல் நிலை
என்னுடைய தேவையை என்னால் பார்த்துகொள்ள முடியும். என்னால் இன்னொருவருக்கும் உதவி செய்ய முடியும்.
இரண்டாம் நிலை
என்னுடைய தேவையை மட்டுமே என்னால் பார்த்துகொள்ள முடியும். பிறர் தேவைகளை பார்த்துகொள்ளும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை
மூன்றாம் நிலை
இன்று பணிக்கு சென்றால் தான் எனக்கு என் தேவையை பார்த்துகொள்ள முடியும் 
இந்த மூன்றாம் நிலை மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு நகர்வை மேற்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கான தேவைகளை இரண்டாம் நிலை மனிதர்கள் செய்யும் போது இவர்கள் நகர்வு தடுக்கப்படும். 
ஒரு நான்கு வாரங்களுக்கு சென்னையில் தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் உதவி வீட்டிலேயே இருக்க செய்வோம்.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு 500 மீட்டர் சுற்றளவில் நமது கண்காணிப்பை தொடர்வோம். அங்கு கொரோனா பரவல் இருந்தால் விரைவில் சரியாக உறுதுணைபுரிவது
மீண்டும் கொரோனா பரவாமல் நகர்வுகளை தடுப்பது
உதவி தேவைப்படுவோருக்கு என்னவிதமான உதவி என்பதை கண்டுபிடித்து அதனை உதவி செய்யும் நிலையில் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ளவர்களிடம் பெற்று செய்வது . இந்த மூன்று செயல்களை செய்தாலே முற்றிலும் கொரோனா பரவலை கட்டுபடுத்திவிடலாம்.
இப்படி ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர் பொறுப்பேற்றுகொண்டால் கொரோனாவை துல்லியமாக ஒழிக்கமுடியும்.
கொரோனா எதிர்ப்பு மக்கள் இயக்கமாக உருவெடுக்கவேண்டும். இதனை கட்டுப்படுத்துவதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.
நான் கொரோனா தாக்குதலில் இருந்து என்னை தற்காத்துகொள்வேன் . கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க என்னால் இயன்ற உதவிகளை செய்வென் என்ற உறுதிமொழியை எடுப்போம். இந்த நோய் தொற்றை முற்றிலும் ஒழிப்போம்

Sunday, June 14, 2020

உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா ராஜ் ?


உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா ராஜ் ?

இப்படி ஒரு கேள்வி என் இன்பாக்ஸில் எட்டிப்பார்த்தது. இந்த கேள்வியை பார்த்தவுடன் எனக்கு சின்ன அதிர்ச்சிதான். ஏன் எனில் இப்படியொரு கேள்வி கேட்பவரை நாம் கவனமாக ஆராயவேண்டும்
ஏன் இப்ப்டி ஒரு கேள்வியை எழுப்பினார்
அவரின் ஆழ்மனதில் இருந்து வந்த உந்துதலா
இல்லை சமூக நிகழ்வின் பிரதிபலிப்பா ? என்பதை ஆராயவேண்டும்
கேள்வி கேட்பவர் எதற்காக கேட்கிறார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிந்துகொள்வது நல்லது.

அந்த சுவரஸ்ய மனிதருடன் சிறிய உரையாடல் நிகழ்த்தினேன் . பார்ட்டி படு ஸ்மார்ட்.
இரண்டு மூன்று முறை தோன்றியிருக்கிறது சார். ஆனால் வினாடியில் அதை தாண்டிவிட்டேன்
//ஆனால் இந்த பிரபலமானவர்கள் பொசுக்கென்று இப்படி செய்யும் போது மனதில் இந்த கேள்வி அடிக்கடி எழுகிறது.//  
உங்கள் மனதில் அப்படி எழுந்திருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன் என்றார்.

நான் மிகவும் சிம்பிளாக பதில் அளித்தேன்.

எனக்கு தற்கொலை எண்ணம் எல்லாம் வந்தததில்லை. ஆனால் கொலை செய்யும் எண்ணம் நிறைய முறை வந்திருக்கிறது. தற்கொலையைவிட இது டேஞ்சர் அல்லவா ? என்றேன். அவர் சாட்டிங்கில் ஒரு ஸ்மைலியை விட்டெரிந்தார் . பார்ட்டி சிரித்துகொண்டிருக்கிறாராம்…….!!!!!

ஆம் ! இது எனக்கு அல்ல இயல்பாக கொஞ்சம்  உணர்ச்சிவசப்படும் நிலையில் உள்ள அதிமேதாவிகள் அனைவருக்கும் ஏற்படும் மனநிலைதான்

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்துடுவோம் !” என்றான் நம் பாட்டன்.
வழக்கமாக ஒருவனுக்கு சோறு கிடைக்கவில்லையெனில் அவனுக்கு சோறு போட ஏற்பாடு செய்யவேண்டும். உலகை அழித்து என்ன நடக்க போகுது தாத்தா என்று அவரிடம் கேட்கவேண்டும் என்பது என் ஆசை. மனுஷனுக்கு சோறு இல்லையென்று நீங்கள் உலகை அழித்தால், உலகின் பிற உயிர்களும் அல்லவா அழிந்துவிடும் ? பாவம் அவை இயல்பூக்க விதியின் படி சிறப்பாக இயங்கிகொண்டிருக்கிறது. ஒரு காக்கையோ அல்லது குருவியோ அல்லது வேறு எந்த மிருகமோ தனது தேவைக்கு போக இன்னொன்றில் எப்பொழுதும் ஆசைப்படுவதில்லை . ஆனால் மனிதன் மட்டுமே ஆசையில் வீழ்ந்து இன்னொருவனுக்கு கிடைக்கவேண்டியவற்றை பதுக்கிகொள்கிறான். நியாயப்படி அழிக்கவேண்டியது உலகை அல்ல அவனைதான். இப்படி தான் தோன்றும் எனக்கு கொலை செய்யும் எண்ணம். அதற்காக என்னை கைது கியிது செய்து விடாதீர்கள் யுவர் ஹானர் !

சரி ! இந்த தற்கொலை எண்ணத்திற்கு வருவோம்,
எனக்கு தெரிந்து அப்படியொரு எண்ணம் எழுந்ததில்லை.
மரணத்தின் விளிம்புவரை கூட அழைத்து சென்றிருக்கிறது இந்த மன அழுத்தம்
எனினும் அதிலிருந்து துளிர்த்து எழ எங்கோ ஒரு மூலையில் ஒரு நம்பிக்கை சிறு பசும் துளிபோல் கைகொடுத்திருக்கிறது.

இந்த தற்கொலை எண்ணம் என்பது  மூளையில் ஏற்படும் வேதியல் குளறுபடி.
இன்னொரு கோணத்தில் மெல்லிதான மனநோய்

தனித்திருத்தலால் ஏற்படும் குழப்பம். இப்படி எல்லாம் வாழ்ந்து என்ன செய்துவிடப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்படுத்தும் மாயவிகாரம். ஆனால் உண்மை என்னவெனில் எப்படியும் வாழலாம் இந்த உலகில்
வாழ வேண்டும் !
வாழ்ந்துதான் தீர்க்கவேண்டும் !

நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம்
நம்பி ஏமாறுவது
அதீத அன்பு வைத்து அதில் ஏற்படும் ஏமாற்றம்
நம் பிரியமானவர்கள் நம்மை விட்டு பிரியும் போது ஏற்படும் ஏமாற்றம்
திடீரென்று ஏற்படும் மனசோர்வு
இப்படி பட்டியலிட்டுகொண்டே போகலாம்

ஆனால் உளவியல் ரீதியாக  ஒரே ஒரு மாற்றம் தான்.
உங்கள் மனம் பீட்டா நிலையில் ( Beta Waves )  இருக்கும் போது தான் எல்லா நெகடிவ் எண்ணங்களும் ஏற்படுகின்றன. அதாவது மன அலைச்சூழல்  வினாடிக்கு 14 க்கு மேற்பட்ட சுழற்சியில் இருக்கும் போது எல்லா விபரீத எண்ணங்களும் ஏற்படும். ஒருவர் அடிக்கடி இந்த பீட்டா நிலைக்கு சென்று வரும் போது மூளை செல்கள் இதனை Capture செய்துவைத்துகொண்டு வேதியல் மாற்றத்திற்கு தயாராகும். இதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படி. இதனை Alpha Wave ஆக மாற்ற வேண்டும். அதாவது வினாடிக்கு 13க்கும் குறைவாக 10 அல்லது  8 என்ற நிலையில் மாற்றவேண்டும் . அப்பொழுது  உலகின் எந்த பிரச்சனையும் ஜுஜுபி தான்.

நெப்போலியன் போனபெட் பாபிலோனா சிறையில் சொன்ன வாசகம் தான்
என் கை 
  எனது கால்கள் 
  எனது கண்கள்
 எதைவேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள். என் தன்னம்பிக்கையை மட்டும் விட்டு வையுங்கள். மீண்டும் இந்த உலகை பிடித்துக்காட்டுகிறேன்என்றானாம்

அதே ! அதே  !திமிரும் தெனாவட்டும் நம்பிக்கையும் தரும் ஆல்பா அலைச்சுழல்கள்.


எல்லா நெகடிவ் செயல்களுக்கும் ஒரு பாசிடிவ் பக்கம் உண்டு

நினைத்தது நடக்கவில்லை எனில் 
அமைதியாக அமர்ந்து நடப்பதை பாருங்கள்
நீங்கள் நினைத்த ஒன்றை விட ஒரு பெரும் அற்புதம் உங்களுக்கு காத்திருக்கும்
இது சத்தியம் !!!

நம்பி ஏமாந்தால்
அதனை கேவலமாகவும் வெட்கப்படும் விஷயமாகவும் நினைக்கவேண்டாம்
அது ஒரு பாடம்
நாம் நமது செயலில் நியாயமாக இருந்திருக்கிறோம்
நம்பிக்கைதுரோகம் செய்தவன்
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களை ஏமாற்றுபவம்
இவர்கள் எல்லாம் ஒரு பதிவை உருவாக்கிகொள்கிறார்கள்
நீங்கள் ஏமாற்றப்படுவது என்பது உங்களுக்கு எந்த பாவப்பதிவையும் உருவாக்காது
ஆனால் உங்கள் சூழலை பயன்படுத்தி ஏமாற்றுபவன் நிச்சயம் ஒரு பதிவை தனக்குள் ஏற்படுத்திகொள்கிறான். உங்களிடம் ஏமாற்றி பெறும் ஒவ்வொன்றிற்கும் அவன் பதில் சொல்லியாகவேண்டும். காலம் அதனை நிகழ்த்தும். அதனால் ஏமாறுவது என்பது இழுக்கல்ல.
உங்களுக்கு பாடம் ! அவனுக்கு பாவம் !

அதீத அன்புவைத்து அதில் ஏற்படும் ஏமாற்றம்
அன்பு என்பது Unconditional வடிவம்
அன்பு உண்மையானது எனில் அதில் ஏமாற்றம் ஏற்படுவதே இல்லை
உங்களை கட்டிகொள்கிறேன் என்று சொல்லி சிரித்து பழகியவள் யாரையோ கட்டுகொண்டு வாழ்ந்துகொண்டிருந்தால் அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தால் உங்கள் அன்பின் வெளிப்பாடு தான் அவளுக்கு அதீதமான வாழ்க்கையை உருவாக்கி தந்திருக்கிறது என்பதை உணர்ந்தால் போதும் உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அவளின் பிரிவு பெரும்வலி.அங்கு எப்படி இருப்பாளோ ? என்ற பயம்கூட காரணமாக இருக்கலாம். அங்கு வாழ்க்கை இயல்பாக அன்பான வாழ்க்கை அமைந்துவிட்டால். அதைதானே நீங்கள் கொடுக்கவிரும்பினீர்கள் ? அதை தானே அவள் அனுபவித்துகொண்டிருக்கிறாள். அதற்காக மகிழ்வதுதானே நமது இயல்பு. இங்கு நீங்கள் அது குறித்து வருத்தப்பட்டால் நீங்கள் வில்லனாக அல்லவா மாறி நிற்கிறீர்கள். அவள் மகிழ்ச்சியாக வாழ்வதை நீங்கள் கொண்டாடும் போது என்று நாயகர்தான். அன்பு உடல்ரீதியான ஈர்ப்பு அல்ல. அது ஒரே நிலைதான். அப்படி அவளின் வாழ்க்கை அங்கு சரியாக இல்லை எனில் அவள் உங்களுடன் இருக்கும் போதும் சரியாக இருந்திருக்காது. இயல்பூக்க நியதி அதுதான். அவளுக்கு ஏற்படும் துன்பங்கள் உங்களிடம் இருக்கும் போது அவளுக்கு ஏற்படவில்லை என்பதும் ஆறுதல் தரும் ஒன்றுதான். Take it easy. எப்பொழுதும் அன்பில் வெற்றிடம் என்று ஒன்றில்லை. நிச்சயம் உங்களுக்குள் ஏற்படும் வெற்றிடம் இன்னொரு பேரன்பால் நிரப்பப்படும்.அதனால் பிரிந்த உறவாக இருந்தால் அதனை எப்பொழுதும் கொண்டாடிகொண்டிருங்கள்.


திடீரென்று மனசோர்வு என்பது எல்லோருக்கும் உண்டு
ஏன் மிருகங்களுக்கு கூட உண்டு
நம்ம வீட்டு செல்ல நாய் ஜிம்மி ஆக இருக்கட்டும்
JimCorbet National Park புலி  விக்ரம் ஆகட்டும்
மிருகங்களுக்கு கூட மனசோர்வு உண்டு என்கிறது ஆராய்ச்சி
அப்படி வந்தால் என்ன செய்யும் ?
கொஞ்சம் வினோதமாக எதையாவது செய்யும் ?
ஊளையிடும்
ஓடும்
ஆடும்
வெகு தீவிரமாக வேட்டையாடும்
நாமும் மிருகத்தின் முன்னேறிய நிலை. நமக்குள் இருக்கும் மிருகத்தை Activate செய்வோம்
ஓடுவோம் - ஓடுவது மனசோர்வை விரட்டும்
ஆடுவோம் - ஆடுவது மனதிற்கும் உடலிற்கும் உற்சாகம் ஊட்டும்
பாடுவோம்  - முயற்சி பண்ணி பார்ப்போம். தற்கொலை முயற்சியில் நாம் சாவதைவிட பாடி நாலு பேரை கொல்வது ஒன்றும் பாவமல்ல !!!!

வாழ்க்கையில் ஒரு Lifeline தேவை 
மன சோர்வு ஏற்படும் நேரத்தில் உங்களை சார்ஜ் செய்துகொள்ள ஒரு Life Line உருவாக்கிகொள்ளுங்கள். எனது Lifeline பயணங்கள்
இலக்கற்ற பயணங்கள். எப்பொழுது சோர்வடைகிறேனோ அப்பொழுது பயணப்பட்டுவிடுவேன்.
எங்கு செல்வது என்ற இலக்கு எல்லாம் இல்லை. நாட்கணக்கில் ரயிலில், பேரூந்தில் இல்லை மலைகளில் நடந்திருக்கிறேன். எனக்கு அப்பொழுது தான் ஒன்று புரிந்தது. இந்த உலகில் உற்சாகப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த சின்ன மனசோர்வை  தாண்டுவது என்பது பெரிய வித்தையெல்லாம் இல்லை. அப்படியே இயல்பாக இருந்தால் அது வந்தது போல் சென்றுவிடும்.
அப்படி போகவில்லையெனில் இந்த  lifeline activate செய்யலாம்
நிச்சயம் ஒரு போன்கால் போதும் உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத ஒருவனுக்கு கூட ஒரு போன் கால் போதும். பிடித்தவன் நம்பிக்கை ஊட்டுவான். பிடிக்காதவன் ரோஷத்தை கிளறிவிடுவான்.
இரண்டுமே  மந்திரயுக்திதான்.

பிரபலமானவர்கள் இறக்கும் போது அதாவது இயல்ப்புக்கு மாறாக இறக்கும் போது அதே மனநிலையில் இருக்கும் பலருக்கு இது போன்ற மனநிலை ஏற்படுவது இயல்புதான். ஆனால் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்களை தாண்டிய எத்தனையோ பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் உற்றுப்பார்த்தால் அந்த ஒரு வினாடி எண்ணத்தை தாண்டியதால் அவர்கள் இத்தனை உயரத்தில் நிற்கிறார்கள்.

எனவே மீண்டும் மீண்டும் மனசோர்வு தரும் ஒன்றை நினைத்து நினைத்து மூளையில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திகொள்வது வேண்டாம்
மனம் சோர்வு வந்தால் கொலை செய்வோம்
அதாவது அப்படி ஏற்படும் எண்ணத்தை கொல்வோம்
அதில் இருந்து விடுபட ஆயிரம் வழி இருக்கிறது
ஜன்னலை திறந்து பாருங்கள் தெரியும்
பிடித்தமானவருக்கு போன் செய்யுங்கள் தெரியும்
இல்லை கதவை திறந்து தெருவில் நடந்து செல்லுங்கள் வழி தெரியும்……

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...